நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம் ஏன்? முன்னாள் அமைச்சர்  கே.சி.வீரமணி விளக்கம் 

by Editor / 01-06-2021 05:42:59pm
நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம் ஏன்? முன்னாள் அமைச்சர்  கே.சி.வீரமணி விளக்கம் 



நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம் ஏன்? என்று  முன்னாள் அமைச்சர்  கே.சி.வீரமணி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 
, 'அமைச்சர் பதவி மட்டும்தான் நிலோபரின் கண்ணுக்குத் தெரிந்தது. இதனால்தான் மக்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்தது. கட்சியினரும் புறக்கணித்துவிட்டார்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்டப் பின்னர் தொண்டர்களிடம் வாங்க திமுகவுக்குப் போகலாம் என்று கூப்பிட்டிருக்கிறார். யாருமே போகவில்லை. தேர்தலுக்குப் பின் நிலோபர் திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் தேவராஜியின் வீட்டுக்கே போய் சால்வைப் போட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, சென்னை கோட்டூர்புரத்திலுள்ள தி.மு.க அமைச்சர் துரைமுருகனின் வீட்டுக்கும் போய் அவரைச் சந்தித்துள்ளார். பிறகு எப்படி அவரை கட்சியிலிருந்து எடுக்காமல் இருப்போம். நிலோபரின் குற்றச்சாட்டுகளை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
2016 தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்க காரணமே நான்தான். ஏம்பா, உனக்கு வேற ஆள் கிடைக்கலையா? என்று அப்போதே அம்மா (ஜெயலலிதா) சொன்னார். நகரமன்ற தலைவராக இருந்திருக்கிறார். கொஞ்சம் வசதி வாய்ப்பும் இருக்கிறது. சீட் கொடுத்தால் செய்வார் என்று நான்தான் ரெக்கமென்ட் செய்தேன். நிலோபர் கபிலுக்கு மீண்டும் சீட் கொடுத்திருந்தால் வாணியம்பாடி தொகுதியும் கைவிட்டுப் போயிருக்கும். புதியவருக்கு, அதிலும் படித்த இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதால் வாணியம்பாடி தொகுதி தற்போது மீண்டும் அதிமுக வசம் இருக்கிறது' என்று கூறினார்.

 

Tags :

Share via