இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நலம் முதலமைச்சர் ஸ்டாலின் விசாரிப்பு

இயக்குநர் பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் பூரண நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அரசியல் கட்சியினர், திரை உலக பிரபலங்கள் என பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரதிராஜாவின் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
Tags :