பி.ஏ.சி.எல் மோசடி; மக்களின் பணத்தை மீட்கவும் - அன்புமணி

by Editor / 04-02-2024 04:40:35pm
பி.ஏ.சி.எல் மோசடி; மக்களின் பணத்தை மீட்கவும் - அன்புமணி

ரூ.60,000 கோடி பி.ஏ.சி.எல் மோசடியில் ஏமாந்த தமிழக மக்களின் பணத்தை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை தேவை என்று  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

, "இந்தியா முழுவதும் சுமார் 6 கோடி மக்களிடமிருந்து அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, ரூ. 60 ஆயிரம் கோடியை வசூலித்து ஏமாற்றிய பி. ஏ. சி. எல் நிறுவனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு பணத்தை மீட்டுத் தர உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு, 8 ஆண்டுகள் ஆகியும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது பெரும் கவலையளிக்கிறது

. அப்பாவி மக்களின் முதலீட்டை மீட்டுத் தருவதில் மத்திய, மாநில அரசுகளின் செயலாக்க அமைப்புகள் காட்டும் அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு நிர்மல்சிங் பாங்கு என்பவரால் கடந்த 1983ம் ஆண்டில் பேர்ல்ஸ் கிரீன் ஃபாரஸ்ட் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம், பின்னர் 1996ம் ஆண்டு அதன் பெயரை பேர்ல் அக்ரோடெக் கார்ப்பரேசன் லிமிடெட் (பி. ஏ. சி. எல்) என்றும், தலைமையிடத்தை டெல்லிக்கும் மாற்றிக் கொண்டது.

நாடு முழுவதும் நிலத்தை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருவதாகவும், முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 12. 50% வட்டி வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்தது. அதை நம்பி, நாடு முழுவதும் 5. 85 கோடி மக்கள், ரூ. 49, 100 கோடி முதலீடு செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளாா்..

 

Tags :

Share via