அதிமுக முன்னாள் எம்.பி. திமுகவில் இணைகிறார்...?

by Editor / 13-08-2025 09:40:27am
அதிமுக முன்னாள் எம்.பி.  திமுகவில் இணைகிறார்...?

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யுமான மைத்ரேயன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டவுடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக மைத்ரேயன் இருந்தார். பின்னர் பாஜகவில் இணைந்தார். முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அண்மையில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : அதிமுக முன்னாள் எம்.பி. திமுகவில் இணைகிறார்...?

Share via
Logo