பிறந்த குழந்தையை படுகொலை செய்த காதலர்கள்

கேரளாவின் இடுக்கி அருகே கம்பம்மேட்டில், கழிவறையில் இறந்த நிலையில் பிறந்த குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். மத்தியப்பிரதேச மாநிலம் மாண்ட்லாவைச் சேர்ந்த சதுராம் (23), மாலதி (21) ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே மாலதி கர்ப்பாமாக இருந்துள்ளார். கடந்த மே 7ஆம் தேதி இரவு மாலதிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கழிவறைக்குள் வைத்து கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். திருமணத்திற்கு முன் குழந்தை பிறந்தது தெரிந்தால் அவமானம் என நினைத்து கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரையும் போலீசார் கடந்த தினம் கைது செய்தனர்.
Tags :