காற்றழுத்த தாழ்வு பகுதி ஓரிரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் சற்று வலுவடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.
Tags : காற்றழுத்த தாழ்வு பகுதி ஓரிரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.