திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு 4 உலக சாதனை நிறுவனங்கள் பாராட்டு.

by Editor / 02-08-2023 10:18:11pm
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு 4 உலக சாதனை நிறுவனங்கள் பாராட்டு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்தவும், வறட்சியை செழிப்பாக்கவும், விவசாயங்களை மேம்படுத்தவும், குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் நடவடிக்கை எடுக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 204 ஊராட்சிகளில் 1,400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் பணி ஆனது தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும்தான் அதிக அளவில் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட முழுவதும் பண்ணை குட்டைகள் வெட்டப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்ய உலக கின்னஸ் சாதனை மத்திய குழுவினர் சவுஜன்யா தலைமையில் டெல்லியில் இருந்து வந்துள்ள குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

  மாவட்டத்தில்  திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளில் சுமார் 1546 பண்ணைகுட்டைகளை எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்கள் பார்வையிட்டு தமிழகத்தில் சிறந்த திட்டம் என தேர்ந்தெடுத்து அதற்கு அயராது பாடுபட்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களை பாராட்டும் விதமாக அவருக்கு உலக சாதனை சான்றுகள் வழங்கினார்கள். இந்த திட்டம் இந்திய துணை கண்டம் மட்டுமல்லாமல் உலகிற்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டதில் மிக உயர்ந்த நோக்கத்தோடு இந்த உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது என்றும்  புகழாரம் சூட்டினர்..

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு 4 உலக சாதனை நிறுவனங்கள் பாராட்டு.
 

Tags : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு

Share via