ஆந்திராவிலிருந்து பேருந்துகளில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லையான கிறிஸ்டியன் பேட்டை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர அரசு பேரூந்தை சோதனையிட்டபோது அந்தபேரூந்தில் பைகளில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அதை கடத்தி வந்த பூவரசன் மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் ஆந்திராவிலிருந்து வந்த மற்றொரு தனியார் பேருந்தை சோதனை இட்டபோது அதில் கடத்திவரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்,அதனை கடத்தி வந்த ஈஸ்வர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மொத்தமாக 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காட்பாடி போலீசார் மூன்று பேரை கைது விசாரணை செய்து வருகின்றனர்.
Tags :