சுகாதாரமற்ற உணவுகள் பறிமுதல் கடைக்கு அபராதம்

by Staff / 14-02-2025 04:57:11pm
 சுகாதாரமற்ற உணவுகள் பறிமுதல் கடைக்கு அபராதம்

மார்த்தாண்டத்தில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது பொது மக்களிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் குழித்துறை நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரம் ஆணைப்படி மார்த்தாண்டம் பகுதியில் இயங்கி வந்த உணவகத்தில் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுகாதாரமற்ற முறையில் இருந்த உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குறிப்பிட்ட கடைக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via