காற்றில் கரைந்த கே கே யின் குரல்

by Staff / 01-06-2022 12:14:32pm
காற்றில் கரைந்த கே கே யின்  குரல்

தமிழ் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் எண்ணற்ற பாடல்களை பாடிய பாடகர் கே கே இசை நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் அவருக்கு வயது 53 பிரபல பாலிவுட் பாடகார்  என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு 10.30 மணி அளவில் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் மாரடைப்பால் காலமாகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரல் கொடுத்துள்ளார் கேகே.மகேஷ்  பட் இயக்கியஜிசம்  என்ற படம் அவருக்கு பாலிவுட் திரை உலகில் பரவலான கவனத்தை அளித்து  தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் மராத்தி உள்பட 10 மொழிகளில் ஏராளமான பாடல்களை அவர் பாடியுள்ளார்.ஏஆர்  ரகுமான் இசையில் காதல் தேசப்படத்தில் கல்லூரி சாலை பாடல் மூலம் பிரபலமானார் கேகே விஜய் அஜித் தனுஷ் படங்களில் பிரபலமான பாடல்களை பாடியுள்ளார். கேகே சரத்குமார் விக்ரம் உள்ளிட்டோரின் படங்கள் உட்பட 60 க்கும் மேற்பட்ட படங்களுக்கு கேகே குரல் கொடுத்துள்ளார் .கேகே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி பலதரப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்திய கேகே அனைத்து வயதினருக்கும் பிடித்தமான பாடகர் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள் அரசியல் பிரமுகர்கள் திரையுலகினர் உள்ளிட்ட பலரும் கேட்கும் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via