எட்டு வாக்குச்சாவடி மையங்களில் மறு வாக்குப்பதிவு
அருணாச்சல பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது, சில வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகள் சேதமடைந்தன. இதன் காரணமாக நாளை (ஏப்ரல் 24) எட்டு வாக்குச்சாவடி மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















