இந்தியா தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை வரவேற்பதாக தலிபான்கள் அறிவிப்பு.
பாதுகாப்பு குறித்து இந்தியா தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை வரவேற்பதாக தலிபான்கள் அறிவிப்ப
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு நிலை குறித்து இந்தியா தலைமையில் நடைபெற்ற 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தை வரவேற்பதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலை குறித்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் டெல்லியில் 7 நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பொருளாதார பாதிப்பால் சிக்கி தவித்து வரும் ஆப்கன் மக்களுக்கு உதவுவது மற்றும் கூட்டுப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலிபான் அமைப்பு, இந்தியா தலைமையிலான பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
Tags :