by Staff /
09-07-2023
04:20:56pm
பிரபல நடிகை சாய் பல்லவி திடீரென்று ஆன்மிக பயணம் செல்ல தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் இவர் காஷ்மீரில் உள்ள பல கோவில்களுக்கு சென்று வழிபட்டார். காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோவிலுக்கும் சென்று நடிகை சாய் பல்லவி பனி லிங்கத்தை வணங்கினார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சாய்பல்லவி நடிப்பில் கடந்த வருடம் தமிழில் கார்க்கி திரைப்படமும் தெலுங்கில் விராட பருவம் ஆகிய படங்கள் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags :
Share via