by Staff /
09-07-2023
04:16:02pm
ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் காரும், லாரியும் நேருக்குநேர் மோதி இன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் பலியாகினர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜயவாடாவைச் சேர்ந்தவர்கள் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் திரும்பும்போது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.<br />
Tags :
Share via