தமிழை செம்மொழியாக அறிவித்ததும் அவர் ஆட்சிக் காலத்தில் தான் -

by Admin / 07-01-2025 10:35:27pm
தமிழை செம்மொழியாக அறிவித்ததும் அவர் ஆட்சிக் காலத்தில் தான் -

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ,ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.ச.இளங்கோவன் நினைவஞ்சலி நடந்தது இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இருவரது படத்தினை திறந்து வைத்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து ஒரு முறை அல்ல .இரண்டு முறை இல்ல. மொத்தம் பத்து ஆண்டுகள் பிரதமர் பொறுப்பிலிருந்து அவர் ஆட்சியை நடத்திக் காட்டி இருக்கிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில் தான் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவைகள் எல்லாம் எண்ணில் அடங்காதது .தமிழகத்தைச் சேர்ந்த 21 பேரை அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக நியமித்ததும் தமிழை செம்மொழியாக அறிவித்ததும் அவர் ஆட்சிக் காலத்தில் தான் என்றும்நீண்ட அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்து இறுதி மூச்சு வரையில் அரசியலில் இரண்டறக் கலந்து பயணித்தவர் முன்னாள் .தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஈ.வி.கே.ச. இளங்கோவன் அவர்கள் அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் தாங்கிக் கொள்ள இயலாத இழப்பு அவருக்கு எனது அஞ்சலி என்று முதலமைச்சர் இருவருக்கும் புகழாஞ்சலி சூட்டினார்.

 

Tags :

Share via