முடி மாற்று அறுவை சிகிச்சையால் இளைஞர் பலி

by Editor / 03-12-2022 08:44:35am
 முடி மாற்று அறுவை சிகிச்சையால் இளைஞர் பலி

தலைநகர் டெல்லியில் திருமணம் செய்வதற்காக தலைமுடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 30 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து, இளைஞர் உயிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக இளைஞரின் தாயார் அளித்த புகாரில், 2 மருத்துவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் தொலைக்காட்சி நிர்வாகியாகப் பணியாற்றிய 30 வயதான அதர் ரஷீத், கடந்த ஆண்டு சிறப்புச் சலுகையைப் பெற்ற பிறகு தலைமுடி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அறுவை சிகிச்சை தவறாகிவிட்டதால், 30 வயதான அவர் கடந்த சில மாதங்களாக செப்சிஸால் பாதிகப்பட்டு இறந்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஒரு கிளினிக்கில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவருக்கு செப்சிஸ் ஏற்பட்டது என்று அவரது தாயார் ஆசியா பேகம், (62), புகார் கூறினார். அவரது தலையில் இருந்து வீக்கம் பரவியதோடு, பயங்கரமான வேதனையை அனுபவித்ததாகவும் தாயார் கூறியுள்ளாார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பல உறுப்புகள் செயலிழந்து தலை வீக்கமடைவதற்குள் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன என்று அவரது தாயார் கூறினார்.

இதனிடையே, கிளினிக் மீது புகார் அளிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்த இருவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
தற்போதையை காலகட்டத்தில், தவறான உணவுப்பழக்கத்தால், இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனை, வழுக்கை பிரச்சனை பரவலாக உள்ளது. இளம் தலைமுறையினர், இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய சமூகத்தில், ஆண்களும் தங்கள் சமூக அந்தஸ்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்ற அழுத்தத்தை உணர்கிறார்கள். மேலும் முன்கூட்டிய வழுக்கை பிரச்சனையால், ஆண்கள் முடி மாற்று அறுவை சிகிச்சையைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் இது சில நேரங்களில் YouTube இல் சுய பயிற்சி பெற்ற போலி நபர்களால் கொடிய விளைவுகளை ஏற்படுத்தலாம்.

 

Tags :

Share via