3,000 புதிய பேருந்துகள் வாங்க முடிவு

by Staff / 19-02-2024 01:49:45pm
3,000 புதிய பேருந்துகள் வாங்க முடிவு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், 500 புதிய மின் பேருந்துகள் வாங்கப்படும். ரூ.665 கோடியில் 14 புறவழிச் சாலைகள் & உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்படும். பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். குறளகம் நவீனப்படுத்தப்படும். சிற்றுந்துத் திட்டம் விரிவுபடுத்தப்படும். முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவச பேருந்து திட்டம் தொடங்க ரூ.3,050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.

 

Tags :

Share via