சட்ட விரோதமாக ட்ரேட் மார்க் லேபிளை பயன்படுத்தி தீப்பெட்டி மற்றும் பண்டல் தயாரிப்பு

by Admin / 27-07-2024 08:32:32pm
சட்ட விரோதமாக ட்ரேட் மார்க் லேபிளை பயன்படுத்தி தீப்பெட்டி மற்றும் பண்டல் தயாரிப்பு

சட்ட விரோதமாக ட்ரேட் மார்க் லேபிளை பயன்படுத்தி தீப்பெட்டி மற்றும் பண்டல் தயாரிப்பு - வினோத் பிரபாகரன் அளித்த புகாரின் அடிப்படையில் திருநெல்வேலி அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை. 

 கோவில்பட்டி ஸ்டேட் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்த வினோத் பிரபாகரன் என்பவர் கோவில்பட்டி சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் ஓம் மேட்ச் இண்டஸ்ட்ரியல் என்ற பெயரில் தீப்பெட்டி தொழிற்சாலை கடந்த ஏழு வருடங்களாக நடத்தி வருகிறார்.இவரது ஆலையில் தயாரிக்கப்படும் தீப்பெட்டி அட்டை படத்திற்கு முன் பக்கம் யானை படத்துடனும் பின்பக்கம் யானை மற்றும் யானை தலை தும்பிக்கையுடனும் (ட்ரேட்மார்க்) சான்று பெற்று இத்தொழில் செய்து வருகிறார். இவரது தீப்பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தீப்பெட்டி பண்டல்கள்  வெளி மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான்,உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது

கடந்த சில மாதங்களாக தனது ஆலையில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்களில் ஏற்றுமதி குறைந்து வந்துள்ளாததாகவும் இதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் இருந்து வந்த பொழுது அதே சிட்கோ தொழிற்பேட்டையில் ஸ்ரீ அபிஷேகப் பிரியன் மேட்ச் இண்டஸ்ட்ரியல் என்ற தீப்பெட்டி தொழிற்சாலை நடத்திவரும் சரவணன் வெங்கடேஷ் மற்றும் குட்டி ஆகியோர்கள் சிட்கோ தொழிற்பேட்டையில் மேட்ச் டிரேடிங் கம்பெனி நடத்தி வரும் ஹரிஷ் என்பவருக்காக வினோத் பிரபாகரன் பயன்படுத்தி வரும் டிரேட் மார்க் படங்களை பயன்படுத்தி தீப்பெட்டி  விற்பனை செய்வது  வந்தது தெரிய வந்தது..

இது தொடர்பாக அங்கு சென்றா வினோத் பிரபாகரன் அரசிடம் எனது ட்ரேட் மார்க் லேபிலை  சட்ட விரோதமாக பயன்படுத்தி தீப்பெட்டி பண்டல்கள் உற்பத்தி செய்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது..

இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்த பொழுது இப் புகார் மீது தாங்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள முடியாது திருநெல்வேலியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு காவல் துறையில் புகார் மனு  அளிக்க கோரி அறிவுறுத்தினர்..

இது தொடர்பாக திருநெல்வேலியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு காவல்துறையில் வினோத் பிரபாகரன் புகார் மனு மற்றும் அவர்கள் உரிய அனுமதியில்லாமல் டிரேட் மார்க் முத்திரையை பயன்படுத்தும் ஆதாரங்களையும் வழங்கினார்

அப்புகார் மனுவை பெற்றுக்கொண்ட அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக டிரேட் மார்க் லேபிளை பயன்படுத்தியது தெரியவந்ததுஇதனை அடுத்து சட்டவிரோதமாக தீப்பெட்டி பண்டல் உற்பத்தி செய்ய லேபில் அடித்து கொடுத்த ஹரிஷ் என்பவர் மீதும் சட்ட விரோதமாக கம்பெனியில் தீப்பெட்டி பண்டல் உற்பத்தி செய்த சரவணன் வெங்கடேஷ் மற்றும் குட்டி ஆகியோர்கள் மீது அறிவு சார் சொத்துரிமை அமலாக்க பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

நாளுக்கு நாள் சீன லைட்டர்கள் அதிகரித்து வரும் சூழலில் இம்மாதிரியாக சட்டவிரோதமாக ட்ரேட்மார்க் லேபிளை பயன்படுத்தியதால் மேலும் தனக்கு 20 லட்சம் ரூபாய் வரை தீப்பெட்டி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு கோவில்பட்டி சாத்தூர் பகுதிகளில் புரோக்கர்கள் முக்கிய பங்காற்றுவதாகவும், காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் வினோத் பிரபாகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

 

சட்ட விரோதமாக ட்ரேட் மார்க் லேபிளை பயன்படுத்தி தீப்பெட்டி மற்றும் பண்டல் தயாரிப்பு
 

Tags :

Share via