விஜய்யிடம் புதிதாக எதுவும் இல்லை. தமிழகக்தில் திராவிட கட்சிகள் மூன்றாக பிரிந்துள்ளன.-அண்ணாமலை

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது மூன்று மாத காலம் சர்வதேச அரசியல் படிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். செய்தியாளர்கள் சந்திப்பில், "தமிழக மக்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளது. 2026 தேர்தல் சரித்திர தேர்தலாக இருக்கும். காரணம் அண்ணன் சீமான், அண்ணன் விஜய் இருக்கிறார்கள், இதற்கு முன் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக இருக்கிறது, பாஜகவுடன் பாமக, அமமுக இருக்கிறது. ஆகையால், 2026 தேர்தல் புதிய களமாக இருக்கும்"
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக என்பது ஒரு குடும்பத்திற்கான கட்சி என்பதை உதயநிதியின் துணை முதலமைச்சர் பதவி உறுதிப்படுத்துகிறது. உதயநிதியின் செயல்பாடுகளை கவனித்து விமர்சிக்க வேண்டிய இடத்தில் நிச்சயம் விமர்சிப்பேன்” என்றார்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு உச்சத்தில் இருந்து இறங்கி வந்துள்ளார் விஜய். அதனை வரவேற்கிறேன் ஆனால், விஜய்யிடம் புதிதாக எதுவும் இல்லை. தமிழகக்தில் திராவிட கட்சிகள் மூன்றாக பிரிந்துள்ளன. திராவிட கட்சிகள் பேசும் சித்தாந்தத்தை தான் நடிகர் விஜய்யும் பேசியுள்ளார்.
என்னை நானே செதுக்கிக் கொண்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், "அரசியலை பொறுத்த வரைக்கும் அவ்வப்போது நம்மை நாமே Shape செய்துகொள்ள வேண்டும். இந்த 3 மாத காலங்களில் என்னை நான் Shape செய்துகொண்டேன்" என்று கூறியுள்ளார்.
Tags : விஜய்யிடம் புதிதாக எதுவும் இல்லை. தமிழகக்தில் திராவிட கட்சிகள் மூன்றாக பிரிந்துள்ளன.-அண்ணாமலை