மத்திய சிறை கைதிகள் 13 பேருக்கு திடீர் வயிற்று வலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

by Editor / 06-04-2024 08:34:45am
மத்திய சிறை கைதிகள்  13 பேருக்கு திடீர் வயிற்று வலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

சேலம் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு கடந்த ஓராண்டிற்கு முன்பு வரை காலை உணவாக பொங்கல் அல்லது அரிசி கஞ்சி வழங்கப்பட்டு வந்தது தற்போது விதவிதமான உணவுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பாக காலையில் இட்லி தக்காளி தக்காளி சாப்பாடு என மாற்றி வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் அடைக்கப்பட்டுள்ள 1089 கைதிகளுக்கும் உணவு வழங்கப்பட்ட நிலையில் 5 மற்றும் 6 வது பிளாக்கில் அடைக்கப்பட்டு இருந்த கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 13 பேருக்கு மட்டும் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது இந்த நிலையில் வயிற்று வலி ஏற்பட்டதாக கைதிகள் தெரிவித்த நிலையில் உடனடியாக அவர்களை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..

 

Tags : சிறை கைதிகள் 13 பேருக்கு திடீர் வயிற்று வலி

Share via

More stories