அதிமுகவை வீழ்த்த திமுக எத்தனையோ அவதாரம் எடுத்தது- எடப்பாடி பழனிச்சாமி. 

by Editor / 06-04-2024 08:31:11am
அதிமுகவை வீழ்த்த திமுக எத்தனையோ அவதாரம் எடுத்தது- எடப்பாடி பழனிச்சாமி. 

 

கோபிசெட்டிபாளையம் கவுந்தப்பாடி ஆவரங்காட்டு பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அருணாசலத்தை ஆதரித்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி  பிரசாரம் செய்தார்


இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், எஸ்.பி.வேலுமணி, எம்.எல். ஏ. கள்.ஜெயகுமார்,பண்ணாரி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்..

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் வரவேற்று பேசினார் 

தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி ,திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அருணாசலத்தை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார் 


அதனை தொடர்ந்து மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி..
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலிலதா ஆகியோர் மக்களுக்காக வாழ்ந்தவர்கள்..இவர்களின் ஆட்சியில் தான் தமிழகம் வளர்ச்சி பெற்றது.. அடித்தட்டு மக்களுக்கு திட்டம் கிடைத்தது..அந்த இரு தலைவர்களும் மண்ணில் தோன்றாமல் இருந்தால் ஏழைகள் ஏழைகளாகவே இருந்திருப்பார்கள்...
ஆனால் வீட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்களும் இருந்திருக்கிறார்கள்.. மக்களைப் பற்றி கவலை இல்லை.. குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்திலும், மத்தியிலும் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நிலைப்பாடு...
 இது போன்ற தலைவர்களை இந்த தேர்தலில் நாம் வீழ்த்த வேண்டும் என்பதுதான் நமது லட்சியம்..

 பல்வேறு அனுபவம் மிக்க வேட்பாளரை அறிவித்துள்ளோம்...உங்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து நமது வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்...

அம்மாவின் மறைவிற்குப் பிறகு இன்றைய முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை ஒழிக்க எடுத்த முயற்சி திட்டங்களை உங்கள் துணையுடன் தூள் தூளாக ஆக்கப்பட்டது...
அவர்களுக்கு துணை போனவர்களுக்கு பொன்மனச் செம்மல், அம்மா ஆகியோர்களின் ஆத்மா தண்டனை கொடுக்க வேண்டும் என எண்ணியது தண்டனையும் கொடுக்கப்பட்டு விட்டது...  இந்த இயக்கத்திற்கு யார் துரோகம் செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு கிடைத்த பரிசு தான் கிடைக்கும்.. இந்த இயக்கம் தெய்வ சக்தி உள்ள இயக்கம்... துரோகம் செய்தால் தானாகவே அழிந்து விடுவார்கள்...

 திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மக்களுக்காக என்ன செய்தார்கள் என மக்கள் கேட்கிறார்கள்...

 தமிழகத்தில் மற்ற தொகுதிகளை விட கோபி அந்தியூர், பவானி, பெருந்துறை என இந்த நான்கு தொகுதிகளை நன்றாக அறிந்தவன் நான்...  இந்தப் பகுதிகளில் விவசாயம், வேளாண்மை மக்கள் நிறைந்த பகுதி... அதனால் தான் அவர்களுக்காக பல்வேறு திட்டங்கள் அதிமுக நிறைவேற்றியது... நீர் மேலாண்மை திட்டம், குடிமராமத்து திட்டம் போன்றவற்றால் பருவ காலங்களில் பெய்கின்ற மழை நீரை முழுமையாக தேக்கி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் வழங்கிய அரசு அதிமுக அரசு...
குறிப்பாக இந்த பகுதி விவசாயிகள் கடந்த 50 வருடமாக அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக கோரிக்கை கொடுத்து வருதாக அம்மா கூறினார்கள்.. அதனால் 1652 கோடி ரூபாய் முழுமையாக மாநில நிதியில், அத்திட்டம் 85 சதவீதம் அதிமுக அரசு செயல்படுத்தியது.  மீதமுள்ள 15 சதவீதம் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கிடப்பில் போட்டு விட்டார்கள்.. 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தப்பட்ட இந்த திட்டம் மீண்டும் அதிமுக ஆட்சி மலர்கின்றபோது நிறைவேறும்...
 இந்த திட்டத்தில் கூடுதலாக 32 ஏரிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்...

 விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு... ஆனால் இப்போதைய திமுக அரசு முழுமையாக வழங்குவதில்லை...

 மத்தியில் கொண்டு வரும் திட்டங்களை நமக்கு கொண்டுவர தகுதியான வேட்பாளர்கள் வேண்டும்... கடந்த 2019 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி எம்பிகள் தமிழகத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.. தமிழகத்திற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை.. ஆனால் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அதிமுக எம்பிக்கள் இருந்தபோது காவிரி நதிநீர் பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் மூலம் தீர்ப்பு பெறப்பட்டது.. அதன் மூலம் ஆணையம் மற்றும் குழு அமைக்கப்பட்ட தற்போது தண்ணீர் பெற்று வருகிறோம்..

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற 29 வது காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு மறுக்கிறது... அதற்கு தமிழக முதல்வர் பதில் அறிக்கை கூட விடவில்லை.. ஏனென்றால் இந்தியா கூட்டணி என்ற பெயரில் அவர் குளிர் காய்ந்து கொண்டிருகிறார்...

பெங்களூரில் நடந்த இந்தியா கூட்டணியின் கூட்டத்தின் பங்கேற்ற போது கூட தமிழக முதல்வர் ஸ்டாலின் காவிரி தண்ணீர் பெறுவதற்கு பேசவில்லை ..

தற்போது நாடாளுமன்ற தேர்தலையொட்டி முதல்வர் 15 இடங்களிலும் அவரது மகன் 25 இடங்களிலும் தேர்தல் பிரச்சாரங்களில் பேசியிருக்கிறார்கள்.. ஆனால் ஒரு கூட்டத்திலாவது விவசாயிகளைப் பற்றி பேசினார்களா? அவர்களின் துன்பத்தை பற்றி எதிரி பார்த்தார்களா என்பதை யோசிங்கள்... விவசாயிகளை புறக்கணிக்கிற அரசு திமுக அரசு..

 ஆனால் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கிற, அவர்களை பாதுகாக்கிற அரசு அதிமுக அரசு..

திமுக 2021 சட்டமன்ற தேர்தலின் போது 520 அறிவிப்புகளை வெளியிட்டனர்..இதுவரை 10சதவிகிதம்  கூட நிறைவேற்றவில்லை... ஆனால் அவரும் அவரது மகனும் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதை தம்பட்டம் அடைகிறார்கள்...
 இவை அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் தான் கொடுக்கிறார்கள்.. அவர்களது வீட்டு பணம் இல்லை...  இந்த திட்டம் கூட அதிமுக அழுத்தத்தின் பேரில்தான் செயல்படுத்தப்பட்டது..

இலவச பேருந்து திட்டத்திலும் குறைவான பேருந்துகளை மட்டுமே கொடுத்துள்ளார்கள்.. பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.. 
போக்குவரத்துக் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் சத்துணவு ஊழியர்கள் விவசாயிகள் என அனைவரின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது...

அதிமுக ஆட்சியில் பவானிசாகரில் இருந்து பவானி வரை தல 20 கோடி மதிப்பீட்டில் 7 செக் டேம்  கொடுக்கப்பட்டது.. கோவையில் இருந்து ஈரோடு வரை நான்கு வழி சாலைகள் கொடுக்கப்பட்டது.. இதேபோல சத்தியமங்கலம் இருந்து மேட்டுப்பாளையம், பவானியில் இருந்து மேட்டூர் என பல்வேறு பகுதிகளில் செயல்படுத்த இருந்த நான்கு வழிச்சாலை திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது.
 
திமுக அரசு நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்துவதாக கூறினார்கள் ஆனால் செயல்படுத்தவில்லை..

ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரைக்கு 2 கிலோ கொடுப்பதாக கூறியதும் வரவில்லை... கல்வி கடன் ரத்து செய்யப்படவில்லை..
 மாறாக மின்கட்டணம் 52மூ உயர்வு, வீட்டு வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் அவதி உற்று வருகிறார்கள்..

திமுக வந்தாலே கரண்ட் கட் வந்துவிடும்.. கரண்டிற்கும் திமுகவிற்கும் மிக நெருக்கம் உண்டு.. 

அதிமுக ஆட்சியில் துறைவாரியாக விருதுகள் பெற்ற மாநிலம் தமிழ்நாடு... ஆனால் திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறைகளே கிடையாது..

ஸ்டாலின் பிரதமராக வேண்டும் என்ற கனவில் உள்ளார்...  ஆனால் அங்கு அவர் போவதற்கு வழியில்லை...

 தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாட்டை காப்போம், ஒற்றை விரால் ஓங்கி அடிப்போம்,என்று கூறி வாக்கு சேகரித்தார்.

 

Tags : அதிமுகவை வீழ்த்த திமுக எத்தனையோ அவதாரம் எடுத்தது- எடப்பாடி பழனிச்சாமி. 

Share via