பெயிண்ட் குடோனில் தீ விபத்து

by Staff / 16-06-2024 05:00:42pm
பெயிண்ட் குடோனில் தீ விபத்து

திருவள்ளூர் மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் அந்த பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ மேலும் பரவாமல் இருக்க குடோனில் இருந்த பெயிண்ட் பேரல்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். விபத்திற்கு காரணம் இதுவரை வெளியாகவில்லை.

 

Tags :

Share via