காதலியை பார்க்க சென்ற இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்த குடும்பம்

by Editor / 22-05-2025 05:33:39pm
காதலியை பார்க்க சென்ற இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்த குடும்பம்

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோயில் தனது காதலியை பார்க்க சென்ற இளைஞரை, பெண்ணின் குடும்பத்தினர் சிறுநீர் குடிக்க வைத்துள்ளனர். கடந்த 20ஆம் தேதி காதலன், தனது காதலியை ஷாப்பிங்கிற்கு அழைத்துச் செல்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, இளைஞரை மடக்கிய பெண்ணின் குடும்பத்தினர், அவரை நிர்வாணப்படுத்தி சரமாரியாக தாக்கி, சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர். இந்த தாக்குதலில் இளைஞரின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via