சீனாவில் திருமண வயதை 18ஆக குறைக்க திட்டம்

by Staff / 28-02-2025 03:43:55pm
சீனாவில் திருமண வயதை 18ஆக குறைக்க திட்டம்

சீனாவில், குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக, திருமண வயதை 18-ஆக குறைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது ஆண்களின் திருமண வயது 22 ஆகவும் பெண்களின் திருமண வயது 20 ஆகவும் உள்ளது. இந்த நிலையில், இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை பராமரிப்பு மற்றும் திருமண செலவுகளை கருத்தில் கொண்டு பெரும்பாலான சீனர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை என கூறப்படுகிறது.

 

Tags :

Share via