மருத்துவ முறைகளை உலகறியச் செய்ய வேண்டும்’ – தமிழிசை செளந்தரராஜன்
இந்திய மருத்துவ முறைகளை ஆராய்ச்சி செய்து உலக அறியச் செய்திட வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரிலுள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில், ஆயுர்வேதம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கை துவக்கி வைத்து பேசிய பல்கலைக்கழக வேந்தர், பாரிவேந்தர், அலோபதி மருத்துவத்திற்கு இணையாக இந்திய மருத்துவத்தை கருத வேண்டும் என்று கூறினார். இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, அலோபதி ஆகிய நான்கும் முக்கியமருத்துவமாக உள்ளதாக கூறிய அவர், இந்திய மருத்தவத்தில் ஆயுர்வேதம் சிறந்த மருத்துவமாக உள்ளது என்றார். மேலும் ஆயுர்வேத மருத்துவம், படிப்பதற்கும, ஆராய்ச்சி செய்வதற்கும், மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களை துவங்குவதற்கும் ஒரு முக்கியமான துறையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்து பேசிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய மருத்துவத்தை பயன்படுத்தினால் மாரடைப்பு வராது என்றார். ஆன்மீகமும் ஆயுர்வேதமும் இணைந்தது இந்திய மருத்துவமுறை எனக்கூறிய அவர், இந்திய மருத்துவத்தை ஆராய்ச்சி செய்து உலக அறியச் செய்ய வேண்டும் என்றும் கூறினார். தமிழ்நாட்டு மாணவர்கள் இந்திய மருத்துவத்தை தமிழில் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Tags :