தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது மாநிலத் தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 6,36,25,813 வாக்காளர்கள் உள்ளதாகவும் அதில் ஆண் வாக்காளர்கள் 3,12,26,759 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,23,91,250 மூன்றாம் பாலினத்தவர் 7,804 பேர் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. வருகிற ஜனவரி 31ஆம் தேதிக்குள் இந்த தேர்தலை நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பொங்கலையொட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதால் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல், சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் ஜனவரி 1ஆம் தேதியை இலக்காகக் கொண்டு கடந்த ஆண்டு முதலே பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து வாக்காளர் சேர்க்கை, திருத்தம் செய்துகொள்ள ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு அதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் டிசம்பர் மாதம் வாக்காளர் திருத்தப் பணிகள் வார இறுதி நாட்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :