by Staff /
09-07-2023
04:33:47pm
கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் முழுவதும் இதுவரை மழையால் 19 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகிய்யுள்ளது. மேலும், 1,100 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளதாக கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Tags :
Share via