திருடியது எப்படி நடித்துக்காட்டிய திருடன்.

by Editor / 16-06-2024 10:15:41am
திருடியது எப்படி நடித்துக்காட்டிய திருடன்.

புதுச்சேரியில் உள்ள உருளையன்பேட்டை முல்லை நகரில் பிரசித்திப் பெற்ற உலக நாயகி அம்மன் கோயில் உள்ளது. அங்கு கடந்த 31ஆம் தேதி இரவு கோயில் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்த திருடன், பீரோ லாக்கரில் இருந்த அம்மன் நெக்லஸ், கம்மல் உட்பட 5 பவுன் நகைகளை திருடியுள்ளான். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் திருடனை தேடி வந்தனர். அதன்பேரில் தற்போது, தொடர் கோயில் திருட்டில் ஈடுபட்டு வந்த கடலூரைச் சேர்ந்த உண்டியல் திருடன் சுகுன்ராஜை கைது செய்தனர். மேலும், கோயிலில் எப்படி திருடினான் என்பதையும் போலீசாரிடம் திருடன் செய்து காட்டியுள்ளான்.அந்தவீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
 

 

Tags : திருடியது எப்படி நடித்துக்காட்டிய திருடன்.

Share via