அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கும் பின்லேடனுக்கும் தொடர்பு இல்லனு சொல்லும் தலிபான்கள்...

by Admin / 26-08-2021 01:07:54pm
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கும் பின்லேடனுக்கும் தொடர்பு இல்லனு சொல்லும் தலிபான்கள்...

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் மூளையாக செயல்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.  

அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் நடந்து சுமார் 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லையென தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் எவ்வித முகாந்திரமும் இல்லையென்றும் ஆப்கன் மீதான போருக்கு இந்த சம்பவம் ஒரு காரணமாக வைத்து பயன்படுத்தப்பட்டதாக கூறினார்.

 அமெரிக்கர்களுக்கு லேடன் இடையூராக கருதப்பட்டபோது அவர் ஆப்கனில்தான் இருந்தார். ஆனால், அவரும், இந்த ஆப்கன் மண்ணும் எவர் ஒருவருக்கும் எதிரியாக செயல்படவில்லை. என்றும்,பெண்களின் உரிமைகள் குறித்த கேள்விக்கு, பெண்களை நாங்கள் மதிக்கின்றோம்.
 
அவர்கள் எங்களின் சகோதரிகள். அவர்கள் பயப்படக்கூடாது. நாங்கள் தேசத்திற்காக போராடியுள்ளோம் இதை நினைத்து பெருமைப்பட வேண்டும்.என ஜபிபுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo