குற்றாலத்தில் குளித்துவிட்டு சென்ற வாகனங்கள் விபத்து இரண்டு விபத்துகளில் மூன்று பேர் பரிதாப பலி.

by Editor / 16-06-2024 09:26:41am
குற்றாலத்தில் குளித்துவிட்டு சென்ற வாகனங்கள் விபத்து இரண்டு விபத்துகளில் மூன்று பேர் பரிதாப பலி.

சென்னையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது குடும்பத்தினர் திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்துவிட்டு குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் சென்று விட்டு சென்னை திரும்பும் வழியில் புளியங்குடி  அருகே விபத்து சிக்கி 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் அனைவரையும் பொதுமக்கள் உள்ளிட்ட நபர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை முடிந்து தற்போது அனைவரும் தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தில் சென்னை ஆவடியை சேர்ந்த ஹேமலதா என்பவர் ஒருவர் பலியாகி உள்ளார் .

இதேபோன்று ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த  ராணுவ வீரர் பாஸ்கரன் கழுகுமலை சேர்ந்த கிருஷ்ணராஜா விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் குற்றாலத்தில் குளித்துவிட்டு அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் வாசுதேவநல்லூர் நவாச்சாலை அருகே வரும்பொழுது கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பாஸ்கரன் மற்றும் காரை ஓட்டிய கிருஷ்ணராஜா ரெண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர் இதில் மாரிமுத்து படுகாயம் அடைந்தார் மாரிமுத்து தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அலிக்கப்பட்டு வருகிறது பாஸ்கரன் கிருஷ்ணராஜ் ஆகியோரது உடல்கள் புளியங்குடி அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது இரண்டு விபத்துக்களுமே அதிகாலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. குற்றாலத்தில் குளித்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பும் பொழுது அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்துக்கள் அந்த பகுதி மக்களிடம்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

 

Tags : குற்றாலத்தில் குளித்துவிட்டு சென்ற வாகனங்கள் விபத்து இரண்டு விபத்துகளில் மூன்று பேர் பரிதாப பலி.

Share via