தீப ஒளி திருநாள் தான் தீபாவளி என்னும் ஒருங்கிணைந்த பண்டிகை.
இந்தியா ஆன்மீக பூமி.. அதன் வெளிப்பாடு தான் இந்து, சமணம், பௌத்தம், சீக்கியம் போன்ற மதங்கள் ஒருங்கு சேர்ந்து கொண்டாடும் தீப ஒளி திருநாள் தான் தீபாவளி என்னும் ஒருங்கிணைந்த பண்டிகை.. இருட்டை அகற்றி ஒளி வழியாக வாழ்க்கை மலருதலை குறியீடாக உணர்த்தும் நாள் தான் தீபாவளி பண்டிகை. மகிழ்ச்சியை நோக்கி நகர்தலையே இந்நாள் வெளிப்படுத்துகின்றது. ஐப்பசி மாதத்தில் திரயோதசி ,சதுர்த்தி, அமாவாசை சுக்குல ,பிரதமை ஆகிய தினங்களில் கொண்டாடப்படுகிற பண்டிகை.. இந்து மதம்இதை புராண இதிகாச கதைகளோடு இணைத்து சொல்கிறது.
. 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராமன் நாடு திரும்பிய போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றதாகவும் திருமால் வராக அவதாரம் எடுத்து நரகாசுரன் என்னும் கொடியஅரக்கனிடம் இருந்து அவனால் சிறைபிடிக்கப்பட்ட பெண்களையும் அதிதியின் நகைகளை மீட்டெடுத்ததாகவும் சொல்கிறது. நரகாசுரன் ,கிருஷ்ணரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த பண்டிகை கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது..
சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த தினத்தை வைத்து தீபாவளி கொண்டாடி வருவதாகவும் புத்த மதத்தில் புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்ற பின்பு கபிலவத்துவத்திற்கு விஜயம் செய்த நாளில் மக்கள் மகிழ்ச்சி கொண்டு விளக்குகளை ஏற்றி புத்தரின் வருகையை கொண்டாடியதாகவும் அந்நாளே தீபாவளியாக- புத்த மதத்தினர் கொண்டாடி வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
இத்தீபத் திருநாளில் ,அதிகாலையில் எழுந்து என்னை தேய்த்து குளித்த பின்பு புத்தாடைகளும் பலகாரங்களையும் வைத்து பூஜை செய்து முடித்த பிறகு அதை அணிந்து இனிப்புகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து பட்டாசு வெடித்து- தீப ஒளி திருநாளை கொண்டாடி மகிழ்வர்.
Tags :