பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள ஜி.கே.எம் காலனி ஜங்குலிங்கம் பிரதான சாலையில்சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் ஜங்குலிங்கம் சாலையில் 25.72 கோடி செலவில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். அத்துடன் 15 ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்த்தி வைத்து அவர்களுக்குரிய சீர்வரிசைகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 17..47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆனகட்டடத்தை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டியதோடு பெரியார் நகர் அமுதம் அங்காடி கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார்.நிகழ்வின் முன்னதாக முதலமைச்சர் ரோடு சோ நிகழ்த்தி பொது மக்களுடன்கைகுலுக்கினார்.
Tags :


















