மாஞ்சோலை பகுதியில் புலிகளால் மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை டாக்டர் கிருஷ்ணசாமி தகவல்

by Staff / 22-02-2025 03:42:33pm
மாஞ்சோலை பகுதியில் புலிகளால் மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை டாக்டர் கிருஷ்ணசாமி தகவல்

மாஞ்சோலை விவகாரத்தில் நடைபெற உள்ள புலிகள் கணக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகளுடன் சமூக ஆர்வலர்கள் மற்றும் மாஞ்சோலை மக்களுக்காக போராடும் தன்னைப் போன்றவர்கள் பங்கேற்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியில் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி வேண்டுகோள்

மாஞ்சோலை விவகாரத்தில் புலிகள் வாழும் பகுதியில் மக்களை எவ்வாறு அனுமதிக்க முடியும் என கேள்விகள் எழுப்பப்பட்டு வருவது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவன டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,
மாஞ்சோலை விவகாரத்தில் இதுவரை புலிகளால் மக்களுக்கு அச்சுறுத்தல் என்ற எந்தவித செய்தியும் ஏற்படவில்லை அந்த வகையில் களக்காடு முண்டந்துறை பகுதியில் புலிகள் உலாவதற்கான அறிகுறிகள் இல்லை. புலிகள் அப்பகுதிகளில் இல்லை என்றால் மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என கூறினார். மேலும் களக்காடு முண்டந்துறை வனத்துறை இயக்குனர் இளையராஜா புலிகளின் கணக்கெடுப்பு இரண்டு நாட்களில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். எனவே வனத்துறை மட்டும் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டால் உண்மை தன்மை வெளியே வராது. ஆகையால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக சுற்றுச்சூழல் சார்ந்த பேராசிரியர்கள், மாஞ்சோலை மக்களுக்காக போராடும் என்னை போன்றவர்கள், சமூக ஆர்வலர்கள் இந்த குழுவில் பங்கேற்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் தென்காசி மாவட்டத்தில் பிரதான பிரச்சனையாக இருக்கின்ற கனிமவள கொள்ளை என்பது தனி நபர் முதல் அரசியல் கட்சியினர் வரை அனைவரும் எதிர்க்கின்றனர். ஆனால் இதுவரை எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் தான் அதற்கான முன்னெடுப்பாக சமூக ஆர்வலர்கள், அனைத்து அரசியல் கட்சியினர் என அனைவரையும் ஒன்றிணைத்து இதை தடுத்து நிறுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் வரக்கூடிய இரண்டு வாரங்களில் நடக்க உள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via