கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியது தமிழக அரசு :திருமணம், இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்.
தமிழகம் உட்பட நாடு முழுவதும், கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து, கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. இதை அடுத்து, சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு, நாடு முழுதும் அமல்படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவதாக, மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதன்படி அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டன.
இதைத் தொடர்ந்து, அனைத்து மாநில அரசுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில்18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் மாநிலத்தில் உள்ள 92% மக்களுக்கும், 2வது டோஸ் 75% மக்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக திரும்பப் பெறப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.இதன்தொடர்ச்சியாக தமிழக கேரளா எல்லைகளிலுள்ள கொரோனா கண்காணிப்பு சோதனைசாவடிகள் அகற்றபட்டுள்ளது.இந்த நிலையில் இன்று தமிழக அரசு கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி ஆணை பிறப்பித்துள்ளது.
இதையடுத்து திருமணம், இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் முக கவசம், தனிநபர் இடைவெளி, கைகால் கழுவி தூய்மை பேணும் நடைமுறைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. தேவையற்ற முறையில் கூட்டம் சேர்வதை தவிர்க்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும்., பூஸ்டர் டோஸ்க்கு தகுதியானவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Tags : Government of Tamil Nadu lifts corona restrictions: