தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

by Staff / 07-07-2023 02:57:34pm
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சிறை தண்டனைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராகுல்காந்தியின் எம்.பி., பதவி பறிப்பையும், பழிவாங்கும் போக்கில் செயல்படும் பாஜக அரசின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து இந்த போராட்டம் நடப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.  
 

Tags :

Share via

More stories