இபிஎஸ் மீதான வழக்கு ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

by Staff / 14-05-2024 12:18:39pm
இபிஎஸ் மீதான வழக்கு ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 14) ஆஜரான நிலையில், வழக்கு விசாரணை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் 75% நிதியை, தயாநிதிமாறன் செலவு செய்யவில்லை என இபிஎஸ் பேசியிருந்தார். ஏப்ரல் 15ஆம் தேதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இபிஎஸ் பேசியதை எதிர்த்து தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்தார். உண்மைத் தன்மையை ஆராயாமல் எடப்பாடி பழனிசாமி பேசியது உண்மைக்கு புறம்பானது, எந்த ஆதாரங்களும் இன்றி தன் மீது அவதூறு பரப்பி உள்ளார் என தயாநிதிமாறன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

Tags :

Share via