சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு..

by Editor / 22-11-2021 09:41:18am
சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு..

குமரி : கீரிப்பாறை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலி

தடுப்பூசி குறைவாக போட்டுள்ள 4 மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை.

ஆப்கனில் 10 லட்சம் குழந்தைகள் இறக்கும் தருவாயில் உள்ளதாக யுனிசெப் தகவல்.

டெல்லியில் மோசமான நிலையில் காற்று மாசு  பள்ளி- கல்லூரிகளுக்கு நவ.26 வரை விடுமுறை.

தமிழ்நாடு வந்துள்ள ஒன்றியக் குழு இன்று ஆய்வைத் தொடங்குகிறது;
 2 குழுக்களாக பிரிந்து சென்னையிலும், கன்னியாகுமரியிலும் பார்வையிடத் திட்டம்.


கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
 658 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. 191 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

சென்னையில் 18-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ₨101.40-க்கும், டீசல் ₨91.43-க்கும் விற்பனை.

பதன்கோட்டில் ராணுவ முகாம் அருகே கையெறி குண்டு வீச்சு
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் ராணுவ முகாம் அருகே கையெறி குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவ முகாமின் திரிவேணி நுழைவாயில் அருகே விழுந்த குண்டு வெடித்ததில் யாருக்கும் காயம் இல்லை.சிசிடிவி காட்சிகளை கொண்டு பதன்கோட் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த தொடா் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக கிலோ ரூ. ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனையானது.தொடர் மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.130-140 வரை விற்பனை.


13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் தற்போது 24.2 அடியாக உள்ளது நீர்வரத்து வினாடிக்கு 9000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.


கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த செம்பேரி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கால் நிரம்பி இரு கரையும் செல்லும் வெள்ளநீர் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

நெல்லை மாநகராட்சி தேர்தலில் புதிய வார்டுகள் மறுவரையறையை கண்டித்து  மேலப்பாளையம் பகுதியில் இன்று கடை அடைப்பு போராட்டம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு.


சென்னை-சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பதவியேற்கிறார்; அவருக்கு கவர்னர் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.


மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் மாபெரும் விழிப்புணர்வு பிரச்சார பேரணி இன்று நடைபெறுகிறது.

 

Tags :

Share via