6 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாப பலி
ஆப்கானிஸ்தானில் கடந்த செவ்வாய் அன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயதான சிறுவனை உயிருடன் மீட்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து இறந்த நிலையில் சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.
ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தின் ஷோகாக் கிராமத்தில் சமீபத்தில் தோண்டப்பட்ட ஆழ் துளை கிணறு ஒன்றினை மூடப்படதா நிலையில் வைத்துள்ளனர்.
இதனிடையில் கடந்த செவ்வாய் அன்று இந்து கிணற்றுக்கு அருகினில் 6 வயதான சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
சிறுவனை மீட்கும் முயற்சியில் ஜே.சி.பி உள்ளிட்ட எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் மீட்பு குழுவினரால் சிறுவனை நெருங்க முடியவில்லை.
அதே சமயம் சிறுவன் சுய நினைவுடன் இருக்கிறாரா என்பதனை அறிந்து கொள்ள சிறுவனின் தந்தை அவரிடம் பேச்சு வார்த்தை கொடுத்து வந்ததாகதெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இருவரும் பேசி வந்துள்ளனர். ஆனால் நேற்று முன்தினம் காலை முதல் சிறுவனிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நான்கு நாட்களின் போராட்டத்திற்கு பின்னதாக நேற்று பிற்பகல் நேரத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டான். சிறுவனை காபூலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டதும் அவனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மீட்பு குழுவினரின் 4 நாட்கள் போராட்டம் அனைத்தும் தோல்வியினில் நிறைவுற்றது.
Tags :