ஆட்சியே போனாலும் கவலையில்லை - உதயநிதி
உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திமுக என்ற கட்சியே சனாதனத்தை ஒழிக்கதான் ஆரம்பிக்கப்பட்டது. சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை. இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, அதை 'பாரத்' என மாற்றிவிட்டார். தனது வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமருக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
Tags :



















