சனாதனம் குறித்து அதிமுகவின் கருத்து என்ன - உதயநிதி

உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி, “அதிமுக என்ற கட்சியின் பெயரில் அண்ணாவின் பெயர் உள்ளது, அண்ணாவை விட சனாதனத்தை எதிர்த்து பேசியது யாருமில்லை. சனாதனம் குறித்து அதிமுகவின் கருத்தை மட்டுமே அறிய விரும்புகிறேன். சனாதனத்தை எதிர்த்து அதிகமாக பேசியது அம்பேத்கர்தான், அவரைவிட அதிகமாக நான் பேசவில்லை” என தெரிவித்துள்ளார்.
Tags :