பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் - உக்ரைன் அதிபர் வருத்தம்
பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலால் 37 பேர் உயிரிழப்பு. 170 பேர் காயமடைந்துள்ளனர். அதே நாளில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிகப்பெரிய குற்றவாளியை கட்டியணைப்பதை பார்க்கும்போது அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சி தோற்றதைப்போல ஒரு ஏமாற்றத்தை தருகிறது” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
Tags :













.jpg)





