முன்னாள் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் சிபிஎம் பொதுச் செயலாளர் பேபி உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் 13 கோடி வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்திரி போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று டெல்லி சந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, இடதுசாரி மாணவர் இளைஞர் அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் முன்னாள் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் சிபிஎம் பொதுச் செயலாளர் பேபி உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு காரணங்களுக்காக 163 விதியின் கீழ் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடையை மீறி போராட்டத்தில் பங்கெடுத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சத்ரா சல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டனர். கைதி நடவடிக்கை குறித்து கேரளா முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் நரேந்திர மோடி அரசு ஜனநாயக உரிமைகளை நசுக்குவதாகவும் தலைநகரை ஒரு திறந்தவெளி சிறைச்சாலை போல மாற்றி விட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். மக்களின் வாக்குரிமையை பறிக்கும் இந்த நடவடிக்கைக்கு பொறுப்பேற்று ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று சிபிஎம் பொதுச் செயலாளர் பேபி தெரிவித்தார்.கொல்கத்தாவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் மம்தா பேனர்ஜியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags :



















