திமுகவை பொருத்தவரை தோல்வியில் வெற்றி - திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின்
தாராபுரம் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இடைத்தேர்தல் முடிவுகளை ஒரே வார்த்தையில் கூற வேண்டும் என்றால் திமுகவை பொருத்தவரை தோல்வியில் வெற்றி என்றும் தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரை வெற்றியில் தோல்வி என்றும் குறிப்பிட்டார். தாராபுரம் மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில் அதன் உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கலைத்து இணைந்து மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட்டு இப்பொழுது வெற்றி பெற்று இருக்கின்ற நிலையில் திமுக மக்களிடம் பெற்ற செல்வாக்கை கொண்டு இரண்டாம் இடத்தில் அதிக வாக்குகளை பெற்று பலமான கட்சிக்காக தன்னை நிரூபித்ததை தோல்வியில் வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
Tags :



















