உலக பசி குறியீட்டு பட்டியலை நிராகரித்த இந்தியா

by Staff / 16-10-2022 01:27:38pm
உலக பசி குறியீட்டு பட்டியலை நிராகரித்த இந்தியா

உலக பசி குறியீட்டு பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 121 நாடுகளில் இந்தியா 107-வது இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளைவிட இந்தியா மோசமான நிலையில் இருப்பதாக பட்டியல் சொல்கிறது. இந்நிலையில், இந்த பட்டியல் தவறானது எனக்கூறி மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக, வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா தனது மக்கள் தொகையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்யாத ஒரு நாடு எனக்கூறி, நாட்டின் பிம்பத்தைக் கெடுக்கும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதி ஆகும். இதில் தீவிரமான வழிமுறை பிரச்சினைகள் உள்ளன. இது பசியின் தவறான அளவீடு ஆகும் என தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories