இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிசுடன் மெல்போனில்....
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிசுடன் மெல்போனில் நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலிய தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். இந்தியாவின் வலுவான பொருளாதாரம் வளர்ச்சிக்கு டிஜிட்டல் மற்றும் கொள்கை சீர்திருத்தங்களை வெளிப்படுத்திய பிரதமர் உலகளாவிய பொருளாதார நிச்சயம் அற்ற நிலைகளுக்கு மத்தியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இயற்கையான மற்றும் நம்பிக்கை கூறிய பங்காளிகளாக திகழ்ந்து வருவதாகவும் நீண்ட கால வளர்ச்சிக்கு இந்தியா மிகவும் பாதுகாப்பான மற்றும் நிலையான நாடு என்றும் நிறுவன தலைவர்களிடம் தூய்மை எரி சக்தி, பேட்டரிகள் லித்தியம் , செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர்கள், விமான போக்குவரத்தின் உள் கட்டமைப்பு, பாதுகாப்பு விநியோக சங்கிலி போன்ற அனைத்து விவரங்களையும் பிரதமர் விளக்கினார். ஆஸ்திரேலியன் சூப்பர் இந்தியாவில் சுமார் 5000 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் மீது சர்வதேச முதலீட்டாளர்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags :


















