குற்றாலம் சாரல் திருவிழா நிகழ்ச்சி  முழுவிபரம். 

by Staff / 11-07-2025 11:38:22pm
குற்றாலம் சாரல் திருவிழா நிகழ்ச்சி  முழுவிபரம். 

 

19.07.2025

பரதநாட்டியம், ஜிக்காட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம் மற்றும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி

 20.07.2025

கொழு கொழு குழந்தைகள் போட்டி, கிராமியகலைநிகழ்ச்சி, கைச்சிலம்பாட்டம் நிகழ்ச்சி, கேரளா மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி

21.07.2025

யோகாசன போட்டிகள், நாட்டிய நாடகம், வில்லிசை நிகழ்ச்சி, தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சி, மற்றும் திரைப்பட மெல்லிசை

22.07.2025

படகுப்போட்டி, பல்சுவை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சி, கொடைக்கானல் - பூம்பாறை பழங்குடியின மக்களின் நடனம் நிகழ்ச்சி, கர்நாடக மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட மெல்லிசை

 23.07.2025

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியம், கவிதை மற்றும் பாட்டுப்போட்டி, திருநங்கைகள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சிகள், கணியான்கூத்து நிகழ்ச்சி, பரதநாட்டிய நிகழ்ச்சி, கர்நாடக மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மெல்லிசை நிகழ்ச்சி

24.07.2025

கோலப்போட்டி, வில்லிசை நிகழ்ச்சி, மல்லர் கம்பம் நிகழ்ச்சி, பரதநாட்டியம் நிகழ்ச்சி, ஆந்திரா , தெலுங்கானா மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், மற்றும் நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சி

25.07.2025

அடுப்பில்லாமல் சமைத்தல் மற்றும் சிறுதானிய உணவுப்போட்டி, நையாண்டிமேளம் மற்றும் கரகாட்டம், கிளாரிநெட் இசைநிகழ்ச்சி, தப்பாட்டம் நிகழ்ச்சி, ஆந்திரா, தெலுங்கானா மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், மற்றும் திரையிசை தெம்மாங்கு நிகழ்ச்சி

 26.07.2025

பளுதூக்குதல், வலுதூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சி, நகைச்சுவை நிகழ்ச்சி, ஜிம்ளா மேளம் நிகழ்ச்சி, மெல்லிசை நிகழ்ச்சிகள்

27.07.2025

நாய்கள் கண்காட்சி, நாட்டிய நாடகம் நிகழ்ச்சி, கிராமிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சி, மற்றும் மயிலாட்டம் நிகழ்ச்சி, மகாராஷ்ரா மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Courtallam Charal Festival program details.

Share via