ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்அறிவித்துள்ளார்.

by Admin / 09-07-2026 12:31:47am
 ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்அறிவித்துள்ளார்.

ஹோமுஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலை கொடுத்ததனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். துருக்கி நேட்டோஉச்சி மாநாட்டில் மாநாட்டின் பொழுது இதனை தெரிவித்தார். கடந்த மாதம் ஈரான் அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இன்று இரவு ஈரான் மீது நாங்கள் கடுமையான தாக்குதலை கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். ஒப்பந்தம் முடிவடைந்ததனால் ஈரான் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதியை அமெரிக்க நீதித்துறை உடனடியாக ரத்து செய்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் ராணுவ இலக்குகள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட இடங்களை அமெரிக்கா தாக்கி உள்ளது. இதற்கு பதிலாக பக்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரானும் ஏவுகணை தாக்குதலை கொடுத்துள்ளது.

 

Tags :

Share via
Logo