சனாதன தர்மத்தை பாதுகாக்க வேண்டும்- உள்துறை அமைச்சர் அமித்ஷா

by Staff / 28-01-2026 12:39:41am
சனாதன தர்மத்தை பாதுகாக்க வேண்டும்- உள்துறை அமைச்சர் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற சுவாமி நாராயண விழாவில் உரையாற்றும் போது சனாதன தர்மத்தின் விழுமியங்களை பாதுகாக்க தவறும் அல்லது அதை பின்பற்றுபவர்களை ஏமாற்றும் எந்த ஒரு அரசாங்கமும் இந்த நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வராது என்று தெரிவித்தார். இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு சனாதான தர்மத்திற்கு உரிய முக்கியத்துவம் அளித்து அதன் கோட்பாடுகளின் படி ஆட்சி செய்யும் ஒரு அரசாங்கத்திற்காக பல்வேறு சனாதனம் மரபுகளை பின்பற்றுபவர்கள் நீண்ட காலம் காத்திருந்தனர் என்றும் குறிப்பிட்ட அவர் துறவியர்களின் ஆசியுடன் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் இனி வெற்றி பெறாது என தான் நம்புவதாகவும் கூறினார்.

 

Tags :

Share via

More stories