விஜய் ஜெயலலிதாவை சந்தித்ததில் என்ன தவறு-நாஞ்சில் சம்பத்

by Admin / 28-01-2026 12:26:17am
விஜய் ஜெயலலிதாவை சந்தித்ததில் என்ன தவறு-நாஞ்சில் சம்பத்

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் நாட்டின் சம்பத் நடிகர் விஜய் கடந்த காலங்களில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து அமைச்சர் கே. என். நேருவின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையாக சில கருத்துக்களை கூறினார். ஒரு திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது ,அந்த துறையில் இருக்கும் ஓர் இளைஞர் அப்போதைய முதலமைச்சரை சந்தித்து தீர்வு காண முயன்றது எந்த விதத்திலும் தவறு இல்லை என்று அவர் வாதிட்டதோடு ஒரு பிரச்சனைக்காக அதிகாரத்தில் இருக்கும் முதலமைச்சரை சந்திப்பது பஞ்சமா பாதகமா என்று கேள்வி எழுப்பிய அவர் அது ஒரு நியாயமான சந்திப்பு தான் என்று குறிப்பிட்டார். .விஜயை குறை சொல்லும் அமைச்சர் நேரு முதலில் தனது துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து கவலைப்பட வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்..

 

Tags :

Share via

More stories