தண்டவாளத்தில் கவிழ்ந்த சரக்கு லாரியால் ரயில்கள் தாமதம்.

by Editor / 25-02-2024 11:12:08am
தண்டவாளத்தில் கவிழ்ந்த சரக்கு லாரியால்  ரயில்கள் தாமதம்.

தமிழக கேரளா எல்லையான எஸ் வளைவு பகுதியில் கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றி வந்த லாரி ஒன்று பகவதிபுரம்-கொல்லம் ரயில் தண்டவாள பாதை பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் லாரி ஓட்டுநர் முக்கூடலைச் சார்ந்த மணிகண்டன் என்பவர் லாரிக்குள் சிக்கி பரிதாபமாக பலியானார்.

 லாரியில் இருந்த கிளீனர் கரிவலம்வந்தநல்லூர் குவளைக்கண்ணி பகுதியைச் சார்ந்த பெருமாள் என்பவர் லாரியிலிருந்து குதித்து உயிர்த்தப்பினார் . உயிர் தப்பி நபர் புளியரை காவல்துறை சோதனை சாவடியில் சென்று விபத்து குறித்து தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர் இந்த நிலையில்  சுமார் 12 பெட்டிகளோடு சிறப்பு ரயில் ஒன்று 12.35 மணியளவில்  பயணிகள் இல்லாமல் இந்த தடத்தில் வந்து கொண்டிருந்தது. ஏற்கனவே இந்த விபத்து குறித்து சத்தம் கேட்டு அருகில் குடியிருந்து வந்த அந்த பகுதியில் இருந்த வயதான தம்பதியினர் சண்முகையா, வடக்கத்தியம்மாள் மற்றும் அருகில் உள்ள தோப்பு காவலாளி சுப்பிரமணியன் ஆகிய மூன்று நபர்களும் லாரி விழுந்து விபத்து சம்பவத்தை நேரில் பார்த்துவிட்டு ரயில் வரும் சத்தம் கேட்டு ரயில்வே தண்டவாளத்திற்கு ஓடிவந்து எஸ் வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்த ரயிலை டார்ச் லைட் அடித்து நிறுத்தினர். இதன் காரணமாக ரயில் ஓட்டுனர் ரயிலை அவசர அவசரமாக நிறுத்தி உள்ளார். இதன் காரணமாக மலை வழிச்சாலையான அந்தப் பாதையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. லாரியை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும் சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் விரைவு ரயில் நான்கு மணிக்கு அளவில் இந்த தடத்தை கடக்க வேண்டியநிலையில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே எஸ் வளைவு பகுதியில் காலி பெட்டிகளில் ஒரு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது லாரி தண்டவாளத்தில் விழுந்த விபத்து காரணமாக இன்று அதிகாலை 4 மணிக்கு 10 பெட்டிகளுடன் புனலூரில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றின் கால் பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லக்கூடிய பயணிகள் சிறப்பு ரயில் 12 35 மணி முதல் எஸ் வளைவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது அந்த ரயிலும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னை கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 3:35 மணி முதல் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது அதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.மேலும் லாரியின் அடியில் சிக்கி இருந்த  லாரி ஓட்டுநர் மணிகண்டனின் உடலை சிதைந்த நிலையில் தீயணைப்பு மீட்ப்புபணிகள் துறையினர் மீட்டனர். மேலும்  லாரியை அகற்றும் பணியில் ஜேசிபி எந்திரங்கள் மூலம் லாரியில் இருந்த சரக்குகளை அப்புறப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து. லாரி அப்புறப்படுத்தும் பணியிலும் காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மேலும் தண்டவாளங்கள்  சேதமடைந்ததாய் உடனடியாக சீரமைத்து அதிகாலை 6.05 மணிக்கு சிறப்பு ரயிலை இயக்கியத்தைத்தொடர்ந்து 07.07 மணிக்கு சென்னை கொல்லம் ரயிலை ரயில்வேத்துறையினர் பாதுகாப்புடன் இயக்கினர்.இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தண்டவாளத்தில் கவிழ்ந்த சரக்கு லாரியால்  ரயில்கள் தாமதம்.
 

Tags : தண்டவாளத்தில் கவிழ்ந்த சரக்கு லாரியால் ரயிகள் தாமதம்.

Share via